ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ? – முக்கிய தகவல்

2.0க்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தீபிகா படுகோன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்திக்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிக்கு ஜோடியாக நடிகை குஷ்புவை ரஞ்சித் அணுகியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பேசப்படுகிறது.

தற்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் அவர் இதில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம். தனுஷ் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவுள்ளது.

Comments

comments