பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கிய மும்பை இந்தியன்ஸ்… 198 ரன்கள் எடுத்தும் படுதோல்வி அடைந்தது மும்பை !

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்  வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் இன்று இந்தூரில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற மும்பை  இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் சேன் மார்ஷ் 21 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் சஹா 11 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார்.

இதனையடுத்து மூன்றாவது  விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த ஆம்லா மேக்வெல் ஜோடி மும்பை அணியின் பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. 18 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ராஹ் பந்துவீச்சில் போல்டானார். அவரை தொடர்ந்து வந்த ஸ்டோனிஸ்  1 ரன்னில் விக்கெட்டை இழந்து வந்தவேகத்தில் வெளியேறினாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஆம்லா 60 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருக்க,20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 198 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கினாலும் இலக்கை கண்டு கொஞ்சம் கூட அச்சம் இல்லை என்பதை நீரூபிக்கும் வகையில் அந்த அணியின் துவக்க வீரர்களான பார்தீவ் பட்டேல் 18 பந்துகளில் 37 ரன்களும், பட்லர் 37 பந்துகளுக்கு 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து அபார துவக்கம் கொடுத்து சக வீரர்களின் வேலையை எளிதாக்கினார்.

இவர்களை போலவே மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராணா 7 சிக்ஸர்களுடன் இந்த தொடரில் மூன்றாவது அரைசததை  பதிவு செய்து கைகொடுக்க 15.3 ஓவரிலேயே இலக்கை அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Comments

comments

Similar Articles