இளையராஜா- எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மோதலுக்கு காரணம் என்ன? பரபரப்பான தகவல்கள்

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கூட்டணியாக மறக்க முடியாத பாடல்களை கொடுத்த இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் 40 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்தனர்.

2500-க்கும் அதிகமான பாடல்களை இளைய ராஜா வும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமானுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று எஸ்.பி.பால சுப்பிரமணியம் பல மேடை களில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய பாடல்களின் காப்புரிமை பிரச்சினைக்காக போராடி வருகிறார். இது தொடர்பாக கோர்ட்டிலும் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ‘இளையராஜாவின் பாடல்களை காப்புரிமை பெறாமல் வெளியிடக் கூடாது’ என்று ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

இதற்கிடையே கடந்த வருடம் அமெரிக்காவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அதுவரை இளையராஜா நடத்தும் கச்சேரிகளில் பாட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

அமெரிக்கா கச்சேரி யில் பாட எஸ்.பி. பால சுப்பிரமணியம் இளைய ராஜாவிடம் ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் அந்த கச்சேரியையே எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புறக் கணித்து அமெரிக்கா செல்ல வில்லையாம். ஆனால் இது பற்றி இளையராஜா இது வரை யாரிடமும் சொல்ல வில்லை.

இப்போது அமெரிக்காவில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் இளையராஜா தான் இசை யமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதன் மூலம் இளையராஜா – எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையேயான 40 ஆண்டு கால நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Comments

comments

Similar Articles