4 வாரத்தில் மெர்சல் செய்த பிரமாண்ட சாதனை.!பிரபல திரையரங்கம் போட்ட அதிரடி டிவிட்.!

பல பிரச்சனைகளை எதிர் கொண்டு, வருமா வராதா என்ற சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியானது மெர்சல் திரைப்படம்.

mersal

படம் வெளிவந்த பின்னும் டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி ஆகிய வசனங்களால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுவே அந்தப் படத்தை 4 வாரங்கள் வரை ஓட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. 4 வாரங்களில் 250 கோடியைத் தொட்டிருக்குமா என விஜய் ரசிகர்கள் இந்நேரம் கூகுளில் தேடி கொண்டிருப்பார்கள்.

mersal

ஆந்திரா, தெலுங்கானாவில் சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான அதிரிந்தி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்றும் நாளையும் அங்கு பல தியேட்டர்களில் 70 சதவீதம் வரை முன்பதிவிற்கான வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.4 வாரங்கள் முடிவில்  250 கோடியைக் கடக்கிறதோ இல்லையோ நாளைக்குள் 250 கோடியைக் கடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

mersal magic
mersal magic

 

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கு மேல் வசூலித்து பல நடிகர்களின் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.

தற்போது தெலுங்கில் வெளியாகி படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வேறொரு புரட்சியை மெர்சல் செய்யும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

Thalapathy Vijay

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோஹினியில் நான்காவது வாரத்திலும் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாம். இந்த தகவலை திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

விஜய் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.

அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.

Comments

comments