சென்னையில் பிரபல திரையரங்கில் தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸ் ஆகவில்லை.!

சூர்யா நடித்து நாளை வெளிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

surya
surya

இந்த படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தானா சேர்ந்த கூட்டத்தின் வெளியான செகன்ட் லுக் விவேகம் , மெர்சல் சாதனையை சமீபத்தில் முறியடித்தது.

தானா சேர்ந்த கூட்டம் வெளிவரும் நேரத்தில் படத்தின் மீது வழக்கு தொடர்ந்தார் பிரசாத் அம்மா சாந்தி.இந்த படத்தை பற்றி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் கருத்து தெரிவித்திருந்தார் இந்த படம் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என கூறினார் இதை படக்குழு முன்பே அறிவித்துவிட்டது.

thana serntha koottam

இந்த நிலையில் ஸ்பெஷல் 26 படத்தை தென்னிந்திய மொழியில் வெளியிட தான் உரிமை வாங்கியுள்ளதாகவும் அதனால் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தடைசெய்ய வேண்டும் என நடிகர் பிரசாந்தின் அம்மா சாந்தி வழக்கு தொடர்ந்தார்.

அதனால் மேலும் தயாரிப்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதில் படக்குழுக்கு சிக்கல் ஏற்பட்டது.

surya

இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல நிறுவனமான ஆர்.பி.பி நிறுவனத்திடம் இருந்து தானா சேர்ந்த கூட்டத்தின் தயாரிப்பாளர் வாங்கியதாக விளக்கம் அளித்தார்.

இதனை ஆதாரத்துடன் படக்குழு நிறுபித்தது அதனால் இதை ஏற்ற நீதிபதி தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளார் படக்குழு இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

surya

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது நாளை அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது ஆனால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கில் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.

surya
surya

இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரோகினி Executive Director ஆனா நிக்கிலேஷ் தனது  ட்விட்டரில் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம் படம் இன்னும் கையெழுத்து ஆகவில்லை காத்திருக்க வைத்ததுக்கு மன்னித்துவிடுங்கள் நாங்களும் வினியோகஸ்தர்களுக்காக காத்திருக்கிறோம்.

மேலும் ஸ்கெட்ச் படத்தின் டிக்கெட் கவுண்டர் இன்னும் 10 நிமிடத்தில் திறந்துவிடும் பர்ஸ்ட் ஷோ ஆரம்பம் காலை 7 மணிக்கு தொடங்குகிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள்.ஆனாலும் இதில் எந்த மாற்றமும் நடக்கலாம் என அனைத்து சூர்யா ரசிகர்களும் காத்திருகிறார்கள்.

Comments

comments