இணையத்தில் தீயாய் பரவும்.!பாவனாவின் வருங்கால கணவர் புகைப்படம்.!

நடிகை பாவனா தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

bhavana

தமிழில், சித்திரம் பேசுதடி, தீபாவளி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பாவனா. தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துவருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கப் போவதாக பாவனா தெரிவித்துள்ளார். நடிகை பாவனாவின் மன தைரியத்தை மல்லுவுட் மட்டும் அல்லாது கோலிவுட், சாண்டல்வுட்டும் பாராட்டுகிறது.

bhavana

பாவனாவுக்கும், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திடீர் என்று நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

ஜனவரி மாதம் எனக்கும், நவீனுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாவனா தெரிவித்துள்ளார்.

நவீன் என்னை நன்கு புரிந்து வைத்துள்ளவர். நான் எதை செய்தாலும் எனக்கு ஆதரவாக இருப்பவர். பெண்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளவர். அதனால் தான் அவரை எனக்கு பிடித்துள்ளது என்கிறார் பாவனா.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்.

ஆனால் என்னை தேடி வரும் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன். என் கதாபாத்திரம் பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்று பாவனா கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் ஆணாதிக்கம் அதிகம். அங்கு நடிகர், நடிகைகளை ஒரே மாதிரியாக நடத்த மாட்டார்கள் என்று பாவனா தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

#bhavana #bhavanaNaveen #bhavanaMenon #bhaavna

A post shared by Bhaavna (@bhavanaofficial) on

இந்நிலையில் நடிகை பாவனா, தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments

comments