பில்லா விற்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா அஜித்..? -தல58 அப்டேட்

வேதாளம், விவேகம் என்று அடுத்தடுத்து அதிரடி படங்களில் நடித்த அஜித் ரிலாக்ஸாக வீரம் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் முடிவை எடுத்திருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

தயாரிப்பாளரும் சரி, இயக்குனரும் சரி… ஒருவரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களின் படங்களில் நடிப்பது அஜித்தின் வாடிக்கை. முன்பு நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, பிறகு ஏஎம் ரத்னம். இயக்குனர் என்றால் அஜித்தின் இப்போதைய பேவரைட் சிவா.

Ajith-Kumar

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து விவேகம் படத்தில் இந்த கூட்டணி ஹேட்ரிக் அடித்தது. அதுவும் வேதாளம் முடிந்த உடனே விவேகம் படத்தில் சிவாவுக்கு வாய்ப்பு அளித்தது ஆச்சரியம்.

இதெல்லாம் ஒண்ணுமேயில்லை என்பது போல் எனது அடுத்தப் படமும் சிவாவுக்கே என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித்.

அஜித்திற்கு விவேகம் ரிசல்ட் பெரிதும் திருப்தி இல்லையாம். அதனால், அடுத்து ஒரு லோக்கல் மசாலா கமர்ஷியல் படத்தில் நடித்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டாராம்.

ajith

அதற்கு அவர் மீண்டும் சிவாவையே தான் இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது, அஜித் தற்போது தோளில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கின்றார்.

வீரம் என்பது துணிவான ஒரு உணர்வு. தான் சந்திக்கும் எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே வீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.

ajith
ajith

மேலும், இப்படம் வீரம் படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, இதை ஒரு பிரபல ஆங்கில சினிமாத்தளம் ஒன்றும் வெளியிட்டுள்ளது.

விவேகத்தின் ஓபனிங் மிரட்டினாலும் பினிஷிங் சரியில்லை. பல இடங்களில் நஷ்டம் என்ற முணுமுணுப்பு கேட்கிறது. ஹை பட்ஜெட் படத்தை இனி சிவா எடுப்பது கஷ்டம். அதனால் வீரம் இரண்டாம் பாகத்தைஎடுக்கலாம் என்று அஜித் ஆலோசனை சொன்னதாக தகவல் உள்ளது.

இன்னும் சில வாரங்களில் முழுவிவரம் தெரிய வரும்.எது எப்படியோ அஜித் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும்.

Comments

comments