அஜித்தின் மச்சினிக்கு வந்த பரிதாப நிலை?

தமிழ் சினிமாவே தற்போது கொண்டாடும் பிரபல நடிகரில் ஒருவர் அஜித். இவர் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில் இவரது மச்சினி ஷாமிலி இவரை போலவே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.

 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வீர சிவாஜி படத்தில் அஜித்தின் மச்சினி என்பதால் இவருக்கு ஏகப்பட்ட பில்டப்கள் தரப்பட்டன. ஆனால் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பை இப்படம் பெறவில்லை.

படத்தில் ஷாமிலி நடிப்புக்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன. எனவே நடிகைக்கு அடுத்து படம் எதுவும் சரியாக அமையவில்லை.

இந்நிலையில் நடிகையின் குடும்பத்தினர் ஷாமிலி இனி நடிக்க வேண்டாம் என சொல்லி…. நடிகைக்கு திருமணம் செய்ய தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம்.

Comments

comments

SHARE