சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் அச்சுறுத்தும் பேய் படம்.! “அவள்” விமர்சனம்.

காமெடி பேய், கவர்ச்சி பேய் என்று படம் எடுத்து வரும் நம் தமிழ் சினிமாவில் ரொம்ப நாள் கழித்து அக்மார்க் பேய் படமாக ரிலீஸாகியுள்ளது அவள். பிரஸ் மீட்டின் பொழுதே இது ஹாலிவுட் பாணி படம் என்று தான் சொன்னார்கள். மிலிண்ட் ராவுடன், சித்தார்த் இணைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். தமிழ்(Aval), ஹிந்தி(The Girl Next Door), தெலுங்கு(Gruham) என்று மூன்று மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.

Aval Movie Review

கதை:

பேய் படங்களில் பல ஜானர்கள் உள்ளது. அதில் வீட்டில் இருந்துகொண்டு துஷ்ட ஆத்மா, புதிதாக வரும் குடும்பத்தை புரட்டி எடுக்கும் வகையறா இப்படம். அந்த வீட்டிற்கு அருகில் இருக்கும் தம்பதியாக சித்தார்த், ஆண்ட்ரியா. 80 வருடங்களுக்கு முன் இருந்த சீன குடும்பத்தினருடைய ஆத்மா, மீண்டும் வந்து தொல்லை கொடுப்பது போல அமைந்துள்ளது இப்படத்தின் திரைக்கதை. படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே கதைக்குள் நுழைந்தது சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். இறுதிவரை சஸ்பென்ஸ் உடைக்காமல் நகர்த்திய நேர்த்தி கட்டாயம் பாராட்டி ஆக வேண்டும். பல காட்சிகளில் பீதியில் அலறுகின்றனர் படம் பார்ப்பவர்கள்.

படத்தின் பிளஸ்:

கதை, திரைக்கதை, கிரிஷின் இசை, ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் கேமரா, நடிகர் நடிகையின் தேர்வு, பேய் ஓட்டும் காட்சி, சோசியல் மெசேஜ்.

படத்தின் மைனஸ்:

ஹிமாச்சலில் அனைவரும் தமிழ் பேசுவது, ஆங்கிலச் மட்டும் பேசும் காது கேக்காத வேலைக்காரி.

முதல் பாதி – சூப்பரோ சூப்பர் ; இரண்டாம் பாதி- சூப்பர்.

சினிமா பேட்டை ரேட்டிங் : 4/5

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: ஹாலிவுட் தரம் என்று சொல்லிய சித்தார்த், ஆண்ட்ரியா உடனான படுக்கை அரைக்காட்சிகள், லிப் கிஸ் என்று அதிலும் அந்த தரத்தை வைத்துள்ளார்.

Comments

comments