பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படத்தின் ஹீரோயின் யாருனு தெரியுமா..? பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க…!!!

தமிழில் உருவாகவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கை பாலா இயக்கவுள்ளார். விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்கு படம் ‘அர்ஜுன் ரெட்டி’. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது.director bala supports ops

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/ டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதன் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதன் ரீமேக்கை இயக்கவிருப்பது யார் என்று பல்வேறு இயக்குநர்களின் பெயர் செய்திகளில் அடிபட்டது. தற்போது இயக்குநரின் பெயரை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பாலா இயக்கத்தில் தமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் உருவாகவுள்ளது.

ஏற்கனவே எதிர்பார்பை அதிகரித்துள்ள இப்படம் துருவ் விக்ரம், பாலா என அடுத்தடுத்த தகவல்களால் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

பாலா இயக்கத்தில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கும் `அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாக கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு நாளும் இப்படம் குறித்த புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அந்த வகையில் துருவ் ஜோடியாக நடிக்கவிருக்கும் நாயகி யார் என்பது குறித்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

`அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஷ்ரியா சர்மா ஏற்கனவே `சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர். `எந்திரன்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலும் ஷ்ரியா சர்மா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அக்ஷரா ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments