பா.ஜ.க.,வில் சேர்கிறாரா பிரபல காமெடி நடிகர்? அமைச்சருடன் ரகசிய சந்திப்பு!

தமிழகத்தில் பா.ஜ.க., வலுவான சக்தியாக மாற தீவிரமாக களமிறங்கியுள்ளது.

அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக வளர்த்துக் கொள்ள பா.ஜ.க., தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக திரைத்துறையை சேர்ந்தவர்களை கட்சியில் சேர்க்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கங்கை அமரனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தனர். எஸ்.வி.சேகர், காய்த்ரி ரகுராமன் உள்பட பல சினிமா பிரபலங்கள் ஏற்கனவே பா.ஜ.க.,வில் உள்ளனர்.

இதன்பின் ரஜினியை எப்படியாவது பா.ஜ.க., பக்கம் இழுக்க தீவிர முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைத்தவிர, இரண்டாவது மூன்றாவது கட்ட நடிகர்களை கட்சியில் சேர்க்கவும்
ஏற்பாடுகள் நடக்கின்றன.

அந்த வரிசையில் இப்போது அவர்களின் பார்வையில் சிக்கியிருப்பவர் காமெடி நடிகர் விவேக். நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். அப்துல் கலாமின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தமிழகம் முழுவதும் ஒருலட்சம் மரக்கன்றுகள் நட்டவர்.

தவிர, பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் விவேக். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வீவேக்கை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பா.ஜ.க.,வில் இணைந்தால் நல்லஎதிர்காலம் உள்ளதாக தெரிவித்ததாகவும் அதற்கு விவேக் அவகாசம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விவேக் தரப்பில், மத்திய அமைச்சர் பொன் ராதா சந்தித்தது உண்மை எனவும், மரம் நடுநிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது.

Comments

comments

SHARE