‘தோழர் நயன்தாரா’ என்று ட்வீட் போட்ட பிரபல இயக்குனர். புது சர்ச்சையில் அறம்.

அட ஆமாங்க இந்த  செயலை செய்தவர், அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித் தான்.

அறம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டூர் கிராமம் கதைக்களமாக இருக்கிறது. ஒரு வசதியும் இல்லாமல் இருக்கும் கிராமம். அந்த ஊரில் இருக்கும் ஆழ்துளை கிணறு ஒன்றில் குழந்தை விழுந்துவிடுகின்றது. அந்தக்குழந்தையை  மீட்டெடுக்க  கலெக்டர், அரசு அதிகாரிகள் மற்றும் அந்த ஊர் மக்கள் எடுக்கும் பரபரப்பான முயற்சியே படத்தின் கதை.

மக்களின் தண்ணீர் பிரச்னை, அரசியல்வாதிகளின் அடாவடி, அரசு அதிகாரிகளின் அலட்சியம், கிராம மக்களின் அவல நிலை என்று படம்முழுக்க உணர்ச்சி பொங்க திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Nayanthara as Collector Mathivathani
நயன்தாரா

படத்தில் நயன்தாரா கலக்டர் மதிவதனியாக நடித்துள்ளார். இப்படத்தில் அதிகார வர்கத்தை எதிர்த்து  போராடுகிறார் நயன்தாரா. பவர் பாலிட்டிக்ஸில் சிக்கி, அதை எதிர்க்கும் கதாப்பாத்திரம் இவருடையது. இப்படத்தில் ஹீரோ கிடையாது; கதையும், திரைக்கதையும் தான் ஹீரோ.

நயன்தாராவின் ‘அறம்’ படம் முழுமைக்கும் நீரரசியலும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்கமும் பேசப்படுகிறது.குடிநீர் பஞ்சம் எனும் மையக்கருத்தைச் சுற்றித்தான் ‘அறம்’ மொத்தக் கதையும் பயணிக்கிறது.

வெற்றி பெற்ற அறம்

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அறம். இப்படத்தை  பார்த்த பலரும் இயக்குனரின் துணிச்சல், தயாரிப்பாளரின் உறுதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பு, ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, திரைக்கதை, ஷார்ப்பான வசனங்கள் ஜிப்ரானின் பின்னணி இசை என்று பாராட்டி வருகின்றனர்.

பா ரஞ்சித்

Pa.Ranjith Twitter Page

முற்போக்கு சிந்தனை உடையவர் ரஞ்சித். தன் படங்களில் சமூகத்தில் நடந்து வரும் பிரிச்சனைகளை மறைமுகமாக வைப்பவர். நேரடியாக சொன்னால் சென்சார் போர்டு ப்ராப்லம் வரும் என்று இவ்வாறு செய்யவது இவர் ஸ்டைல். படமும் கமேற்சியல் ஹிட் ஆகும்,இவர் கருத்தும் ரீச் ஆகும்.

மெட்ராஸ் திரைப்படத்தில் சுவரை வைத்து நடக்கும் அரசியலையும், கபாலியில் மலேசிய வாழ் தமிழர்களுக்காக போராடும் ஒருவன் என்று இருந்தது கதை. காலாவில் எதை புகுத்தியுள்ளார் என்று அவருக்கே வெளிச்சம்.

இயக்குனர் பா.ரஞ்சித்- தோழர் நயன்தாரா  ட்வீட்

அறம் படம் பார்த்த இவர் இந்த டீவீட்டை தட்டி விட்டார் “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி ஒன்று சேர்போராடு, இயக்குனர், படக்குழுவினர்க்கும் தோழர் நயன்தாரா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.” என்பதே அது.

இவ்வாறு  இவர் தோழர் என்று சொன்னது. ‘கற்பி ஒன்று சேர் போராடு’ என்று  அம்பேத்கர் அவர்களின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் . இந்த ட்வீட் தற்பொழுது  சர்சையை ஏற்படுத்தி வருகிறது. சாதி, மதம் என எந்த ஒரு விஷயமும் இல்லாமல் முழுக்க முழுக்க மக்களின் பிரச்சனையை பேசும் படமாக அமைந்துள்ளது அறம்.  இந்த படத்தை பற்றிய ட்வீட்டில் ரஞ்சித் அவர்கள் ஏன் அரசியலை  சேர்த்தார் என்று அலசி ஆராய்கின்றனர் நெட்டிசன்கள்.

சினிமாபேட்டை கிசு கிசு
Nayanthara

இயக்குனர் ராம் தொடங்கி பலர் தங்கள் படத்தின் நாயகனின் பெயர் பிரபாகரன் என்று வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதற்கு இலங்கை வாழ் தமிழர்களுக்காக போராடிய  தலைவர் மேல் உள்ள ஈடுபாடு தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவின் பெயர் மதிவதனி. மதிவதனி தலைவர் பிரபாகரனின் மனைவி பெயர். தெரிந்து வைத்தாரா இயக்குனர். அல்லது தற்செயலாக நடந்ததா? இதற்கு கோபி நைனார் தான் பதில் அளிக்க வேண்டும்.

Comments

comments