ரஜினியால் அரசியலில் தாக்கு பிடிக்க முடியாது! பிரபல நடிகர் கருத்து

சமீப காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கட்சி துவங்கப்போகிறார், அரசியலில் இறங்க போகிறார் என்னும் செய்தி பரவி வருகிறது… இதனை வழுப்படுத்தும் வகையில் ரஜினியும் சில பேட்டிகள் அளித்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஜினி கமலை விட எனக்கு அதிகம் நெருக்கமானவர். அவரை ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது பார்த்துவிடுவேன். அவரிடம் வெகு நேரம் பேசுவேன் ஆனால் அந்த பேச்சு சினிமா பற்றியதாக மட்டுமே இருக்கும்.

rajini-sorry-to-actress-2-0ரஜினி ஒரு தனிமை விரும்பி, அமைதி விரும்பி. மனதில் பட்டதை வெளிப்படையாய் உடைத்து கூறும் தன்மையுடையவர், மறைத்து சூழ்ச்சியாக தந்திரமாக பேச தெரியாதவர். அப்படிப்பட்டவருக்கு அரசியல் எப்படி ஒத்துவரும் என்று நான் பல முறை நினைத்ததுண்டு.

best-parthibanரஜினிக்கும் இதில் பெரிய விருப்பம் இருப்பது போல் தோன்றவில்லை, அவரை யாரோ அரசியலுக்கு உந்துகின்றனரோ என்ற சந்தேகம் எனக்குள்ளது. அவரது தற்போதைய சூழல் காரணமாகவே அவர் அரசியல் பற்றி சிந்திக்கிறார்.

ஆனால் அவரால் இங்குள்ள அரசியல் சூழலை எதிர்கொண்டு சமாளித்து தாக்குபிடித்தல் இயலாது. அவர் அதற்கானவர் அல்ல.

rajiniஇவ்வாறு பார்த்திபன் கூறினார். மேலும் ஜெயலலிதா இறப்பில் தனக்கும் சந்தேகம் இருக்கிறது என்ற சர்ச்சை கருத்தையும் மொழிந்தார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அப்டினா அமைதியா, தனிமையை விரும்புறவங்க அரசியலுக்கு வரகூடாதுனு அர்த்தமா? சரியா புரியலையே…!!!

Comments

comments

SHARE