சசிகுமாருக்கு வில்லனாக பிரபல ஹீரோ?

சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக இருந்த கொம்பன் இயக்குனர் முத்தையா, அது தள்ளிபோவதால் சசிகுமாரை வைத்து படம் இயக்க முடிவெடுத்து அதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவை நடிக்கவைக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்தது. தற்போது படத்தின் வில்லன் பற்றி புதிய செய்தி வந்துள்ளது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சசிகுமாரே தயாரிக்கும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments