biggboss-ல் ஓவியா இடத்தை நிரப்ப வருகிறார் பிரபல சீரியல் நடிகை.!!!

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை 6 வாரங்கள் முடிந்துள்ளது.இன்னும் 8 வாரங்கள் நடைபெற வேண்டும். 8 போட்டியாளர்கள்தான் உள்ளனர். எப்படியும் இன்னும் 2 பேர் தேவைப்படுவார்கள்.இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓவியா மற்றும் ஜூலி ஆகிய இருவரும்தான் கட்டி இழுத்து சென்றனர்.

அவர்களால்தான் நிகழ்ச்சியும் இந்த அளவுக்கு பிரபலமானது.அவர்களும் பிரபலமானார்கள். தற்போது இவர்கள் இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டனர்.எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியும் டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. எனவே ஓவியாவுக்கு மாற்ற வலுவான ஒருவரை களம் இறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது.

இதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகி பிரியாவிடம் பேசப்பட்டுள்ளது.இவரும் ஒப்பு கொண்டதா கூறப்படுகிறது. அவர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை களம் இறங்க உள்ளார் என கூறப்படுகிறது.

பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக ஊடக வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதே மற்றொருவர் வைல்டு கார்டில் ஓவியா அல்லது பரணி வருவார் என்று கூறப்படுகிறது.

Comments

comments

SHARE