மாறுவேடத்தில் பாகுபலி 2 பார்க்க சுத்தி சுத்தி வந்த பிரபலம் யார் தெரியுமா?

பாகுபலி-2 இந்திய சினிமாவின் வசூலில் ஒரு மைல் கல் என்று கூறிவிடலாம். இப்படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

நாளுக்கு நாள் பல வசூல் சாதனைகளை படைத்து வரும் இப்படம் தற்போது 20 நாள் முடிவில் ரூ 1475 கோடி வசூல் செய்துள்ளது.

இதில் இந்தியாவில் மட்டும் ரூ 1210 கோடி வசூல் செய்ய, வெளிநாடுகளில் ரூ 265 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

இன்று எப்படியும் ரூ 1500 கோடி கிளப்பில் பாகுபலி-2 இணைந்துவிடும் என கூறப்படுகின்றது.

பாகுபலி 2

பாகுபலி 2 படம் கடந்த மாதம் 28ம் தேதி ரிலீஸானது. ஆனால் பாகுபலி 2 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் படம் நிச்சயம் மேலும் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி

பாகுபலி 2 படத்தை ரஜினி ஏற்கனவே தனது வீட்டில் பார்த்துவிட்டு ட்விட்டரில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்களோடு ரசிகர்களாக சேர்ந்து படத்தை பார்க்கும் ஆசை ஏற்பட்டது.

சத்யம் சினிமாஸ்

ரஜினி மாறுவேடம் போட்டு சத்யம் தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக அமர்ந்து பாகுபலி 2 படத்தை பார்த்து ரசித்துள்ளார். தியேட்டரில் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

ரசிகர்கள்

ரஜினி மாறுவேடம் போட்டு தியேட்டர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது புதிது அல்ல. ரசிகர்கள் கூட்டம் கூடிவிடாமல் இருக்க அவர் மாறுவேடத்தில் சுற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

SHARE