அஜித்திடம் கேளுங்க.! நான் இப்போவும் அஜித்துடன் நடிக்க ரெடி.! பிரபல நடிகை.!

அஜித் என்றால் மாஸ் தான். தல என்று ரசிகர்கள் போற்றி மகிழும் அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் உண்டு. அஜித் படங்களுக்கு அவர்களிடம் எப்போதும் எதிர்ப்பார்ப்பு அதிகளவு இருக்கும்.

ajith

விவேகத்துக்குப் பிறகு அஜித் இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிப்பார் என்றும் விஷ்ணுவர்த்தன் அவரை அணுகினார் என்றும் செய்திகள் வெளிவந்தன. புஷ்கர் காயத்ரியை சந்தித்தார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அஜித் 58 படத்தையும் சிவாதான் இயக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 58வது படத்தை பற்றி நிறைய தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. அடுத்த படத்தையும் சிவா இயக்க இருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ajithpolice

தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் சமீபத்தில் ஒரு ஹோட்டலில் கவர்ச்சியாக நடந்து செல்வது போன்ற விடியோவை வெளியிட்டிருந்தார்.

அதை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் ‘பில்லா படத்தில் இயக்குனர் விஷ்ணு வர்தன் உங்களை மிஸ் பண்ணிட்டார்” என கூறியிருந்தார்.

Neethu-Chandra

பில்லா படத்தில் நீச்சல் குளத்திற்கு அருகில் நயன்தாரா பிகினியில் நடந்து வரும் சீன் போன்று நீது சந்திராவின் வீடியோவும் இருந்ததால் அந்த ரசிகர் அப்படி கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள நீது சந்திரா, “அவரிடம் கேளுங்க… நான் இப்போவும் நடிக்க தயார்” என கூறியுள்ளார்.

 

Comments

comments