படப்பிடிப்பில் வழுக்கி விழுந்தது கீர்த்தி சுரேஷ் இல்லை. இந்த நடிகை தான்.

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த சில நாட்களிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என்று பிஸியாக உள்ளவர். என்ன தான் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகளவில் இருந்தாலும், இவரை கலாய்க்க என்று ஒரு கூட்டமும் இணையத்தில் உண்டு. இவரை செலஃபீ குயின், ஓவர் ஆக்ட்டிங் என்று சொல்வது தான் அவர்கள் வேலை. எவ்வாறு இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஹாட், ட்ரெண்டிங் ஆன நடிகை இவர் தான்.

Keerthy Suresh

தமிழில் ரஜினி முருகன், ரெமோ படங்களில் பேசப்பட்ட கீர்த்தி சுரேஷ், பைரவா படத்தை அடுத்து தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி-2, சாமி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையம்மாக வைத்து எடுக்கும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் இப்படப்பிடிப்பில் கீழே விழுந்துவிட்டார் என்று ஒரு செய்தி பரவ, அதை தொடர்ந்து ஒரு வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவை பார்க்கும் போது அப்படியே கீர்த்தி போலவே இருக்க, நம் தளத்தில் கூட இதை குறிப்பிட்டு இருந்தோம்.

Viral video Showing actress fall in shooting spot

பிறகு இச்சம்பவம்  பற்றி விசாரிக்கையில் தான் தெரிந்தது, அது கீர்த்தி இல்லை என்று. இந்த சம்பவம் நடத்துள்ளது மலையாள பட ஷூட்டிங்கில். லிண்டா குமார் என்ற நடிகை தான் படப்பிடிப்பில், பாடல் ஷூட்டிங்கின் பொழுது வழுக்கி  விழுந்தார் என்பது. இதனை அப்படக்குழு உறுதி செய்துள்ளது. இதோ இவர் தான் லிண்டா குமார்…

Linda Kumar : Kunjiramante Kuppayam
லிண்டா குமார்

மலையாளத்தில் சித்திக் சென்னமங்களூர் இயக்கும் படம் குஞ்சிராமன்ட் குப்பாயம். அதில் தான் லிண்டா குமார் நடித்து வருகிறார். மேற்க்கூறிய சம்பவம் நடைபெற்றது கோழிக்கோடு அருகில் உள்ள ஜானகி காடுகளில் தான். வழுக்கி விழுந்த இவருக்கு அங்கு இருந்தவர்கள் முதலுதவி செய்துள்ளனர். சிறு காயங்களுடன் லிண்டா தப்பித்து விட்டார். எனினும் அவருக்கு ரெஸ்ட் வழங்கிவிட்டது படக் குழு. சில நாட்களுக்கு பின் மீண்டும் இப்பட ஷூட்டிங்கில் இணைவாராம் லிண்டா.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

கீர்த்தி சுரேஷ் என்று தவறாக செய்தி பரவினாலும், இப்பொழுது அந்த மலையாள படத்துக்கும் நல்ல விளம்பரமாக இந்த செய்தி அமைந்து விட்டது. யாருக்கு தெரியும் விரைவில் லிண்டா தமிழில் கூட நடிக்க வாய்ப்பு இருக்கிறது. சும்மா வா சொன்னாங்க ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு’ என்று.

Comments

comments