‘மெர்சல்’ படத்தில் விஜய் செய்ததை ‘கமல்’ நிஜத்தில் செய்துள்ளார்.!

கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டியுடன் உரை நிகழ்த்தி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார்.

kamal
kamal

மெர்சல் திரைபடத்தில் விஜய் ஒரு காட்சியில் வெளிநாட்டில் நடைபெறும் பாராட்டு விழாவுக்கு வேஷ்டி அணிந்து வீரநடை போட்டு செல்லுவார். அந்த காட்சி தமிழரின் அடையாளத்தை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று அனைவராலும் பாராட்டப்பட்டது.

kamal
kamal

இந்த காட்சியை கமல் அவர்கள் உண்மையாக்கி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார். இந்தநிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு உண்மையான தமிழன் தமிழகத்திற்கு தலைமையேற்க போகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கமல் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

kamal
kamal

மேலும் அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் நான் ஆற்றிய உரையை, எம் மக்களுக்காக அதன் தமிழ் மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன். தமிழர்களின் எதிர்காலம் குறித்த என் அக்கறையை உலகெங்கும் அறியச் செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு என் நன்றி! என்று டிவிட் செய்துள்ளார்.