ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா – டீசர்

‘புரூஸ் லீ’ படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘நாச்சியார், அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது.

இதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார்.ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின். இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார். ஜி.வி.பியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘S ஃபோக்கஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று டீஸர் வெளியானது.