மணிரத்னம் இயக்கத்தில் STR, விஜய் சேதுபதி இணையும் படத்தின் அதிகாபூர்வ அறிவிப்பு..!

விஜய் சேதுபதி இந்த உயரம் வருவதற்கு நிறைய உழைத்து இருக்கிறார். புதுப்பேட்டையில் தனுஷின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக மூலையில் உட்கார்ந்து இருந்தார்.

அதன் பின் நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் ஒரு நிமிட காட்சியில் வந்து நடித்தார். அந்த வீடியோ தான் இது….எப்படியோ, அவரின் ஹீரோ கனவு பலித்து, இன்றைக்கு முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வந்துள்ளார்.

இந்த வருடமும் கைநிறைய படங்கள் வைத்துள்ள விஜய்சேதுபதி, தன் மனசு ஓகே சொல்லும் ஸ்க்ரிப்டைத்தான் ஒத்துக்கொள்ளுவாராம். பண கஷ்டம் இருந்தபோது கூட, வருகிற எல்லா படத்தையும் அவர் ஒத்துக்கொண்டதில்லை.

தன் மனசுக்கு பிடித்த படங்களை ஒத்துக்கொள்ளுவதாக சொல்லும் விஜய்சேதுபதி இன்றைய தினத்தில் கோலிவுட்டின் ட்ரெண்ட் செட்டர் ஹீரோதான்.

தான் இயக்கவுள்ள ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை, அக்டோபரில் துவங்க சிம்பு திட்டமிட்டு இருக்கிறார்.தனது இயக்கத்தில் உருவாகவுள்ள ஹாலிவுட் படத்தின் முதற்கட்ட பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.Simbu-AAA

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்காக ஜனவரியில் தேதிகள் ஒதுக்கியுள்ளதால், அக்டோபரில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க சிம்பு முடிவு செய்துள்ளார். டிசம்பருக்கும் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஜனவரியில் மணிரத்னம் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

ஹாலிவுட்டில் மட்டுமே படமாக்கிவிட்டு, மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் சிம்பு. இப்படத்தில் பாடல்கள் கிடையாது. மேலும், இடைவேளையின்றி ஒரே கட்டமாக திரையிடவும் முடிவு செய்திருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக சில வாரங்கள் முன்பே தகவல் வெளியானது.

அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசுயமைக்கவுள்ளார், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Comments

comments

SHARE