தமிழ்நாட்டில் படித்த ஆண்கள் அதிகம் இருப்பது எந்த மாவட்டம் தெரியுமா?

2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் அதிகம் படிப்பறிவு கொண்ட ஆண்கள் உள்ள மாவட்டம் கன்னியாகுமரியாகும் .

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு , இந்திய மக்களின் வாழ்க்கை,சமூக நிலையை கணக்கிட உதவுன் முக்கிய கருவி என்பதால், நபர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி கல்வி, வருமானம் உட்பட பல்வேறு தகவல்களும் பெறப்படுகின்றன.

 

கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள ஆண்களின் கல்வியறிவு சதவீதம் 86.81 % என்பது தெரியவந்தது. மாவட்டங்களின் அடிப்படையில் கன்னியாகுமரி முதலிடமும், சென்னை மற்றும் நீலகிரி ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்றுள்ளன.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நகர்புறத்தில் கல்வியறிவு பெற்ற ஆண்கள் அதிகம் உள்ள மாவட்டம் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகும். இந்த மாவட்டங்களின் நகர்புற ஆண்கள் 94.17 சதவீதம் கல்வி அறிவு பெற்றுள்ளனர். நகர்ப்புற ஆண்கள் கல்வியறிவை பொறுத்தவரை, இரண்டாம் இடத்தில் கன்னியாகுமரியும் (94.15 %),மூன்றாவது இடத்தில் நாகப்பட்டினமும் (94.08 ) உள்ளன. கடைசி இடத்தை தர்மபுரி மாவட்டம் (78.17 %) பிடித்துள்ளது.

கிராமப்புற ஆண்கள் கல்வியறிவை பொறுத்த வரை, கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்திலும் (92.49 %), இரண்டாம் இடத்தில் நீலகிரி மாவட்டமும் (89.87 %), மூன்றாவது இடத்தில் தூத்துக்குடி மாவட்டமும் (88.85 %) உள்ளன. இதிலும் கடைசி இடத்தை தர்மபுரி மாவட்டமே (67.3 %) பிடித்துள்ளது.

Comments

comments

SHARE