அட்லீ சார், இது தான் ‘மெர்சல்’ படத்தின் கதையோ.?

இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.விஜய் எத்தனை கதாபாத்திரங்களில் வருகிறார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அட்லீ தெரிவித்துள்ளார்.படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அட்லீ கூறியதாவது எனது படங்களுக்கு எப்போதும் ஆதரவு கொடுத்து என்னை வளர்த்து வரும் நீங்கள் இந்த படத்துக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்ட அட்லீ, மெர்சல் தீபாவளியை கொண்டாட தயாராவோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

mersal arasan

தற்போது தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டுள்ள கேளிக்கை வரி பிரச்சினை காரணமாக கடந்த வாரத்தில் இருந்தே புதிய படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் மெர்சல் படத்தின் கதை என்று கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது ஒருசிலர் பதிவும்  செய்துள்ளனர்.

அந்த கதைப்படி படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறாராம். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த கதை என்னவென்று பார்ப்போமா!

mersal

சென்னையில் டாக்டராக இருக்கும் விஜய் மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார். அங்கு தற்செயலாக மேஜிக்மேன் விஜய்யை பார்க்கின்றார்.இருவருக்கும் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்த பின்னர் இருவரும் சகோதரர்கள் என்பது தெரியவருகின்றது.

பிளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவர் விஜய் எதிர்பாராத காரணம் ஒன்றால் தனக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்றை ராஜஸ்தான் குரூப் ஒன்றுக்கு கொடுக்கின்றார்.

இன்னொரு குழந்தையை அவரே வளர்க்கின்றார். இந்த நேரத்தில் மதுரையில் ஃபேக்டரி ஒன்று நடத்தி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் அநியாயத்தை எதிர்த்து போராடுகிறார்.

mersal-vijay

இதனால் அவர் எஸ்.ஜே.சூர்யாவால் கொல்லப்படுகிறார்.விஜய்யின் மகனை கோவை சரளா எடுத்து சென்னைக்கு அழைத்து வந்து வளர்க்கின்றார்

இந்த நிலையில் இரு விஜய்யும் இணைந்து பெற்றோர்களை கொன்ற எஸ்.ஜே.சூர்யாவை பழிவாங்குகின்றனர் இரண்டு விஜய்யும் ஆடும் ருத்ரதாண்டவமே கதை’ என ஒரு கதை உலா வர,.

இதுதான் கதை என்று இணையதளங்களில் பரவி வருகின்றது. இது உண்மையா? என்பது வரும் 18ஆம் தேதி தெரிந்துவிடும்.

Comments

comments