மெர்சல் சாதனையை தூக்கிச் சாப்பிட்ட பத்மாவதி ட்ரெய்லர்! அதிரும் கோலிவுட்…!!

சரித்திரப் படமாக உருவாகி வரும் ‘பத்மாவதி’ படத்தில் ரன்வீர் சிங், சாஹித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து பத்மாவதி என்ற படத்தை இயக்கி உள்ளார். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கிறது.

padmavati

பத்மாவதியாக தீபிகா படுகோனேவும், அவரது கணவராக ரத்தன் சிங் வேடத்தில் ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். பத்மாவதி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘பத்மாவதி’ படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் ஃபர்ஸ்ட் லுக்கும் தனித்தனியாக வெளியிடப்பட்டு வந்தன. ‘பத்மாவதி’ படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க, வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

padma

‘பத்மாவதி’ படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனித்தனியாக வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரன்வீர் சிங், சுல்தான் அலாவுதின் கில்ஜி வேடத்தில் ‘பத்மாவதி’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரன்வீர், நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாகுபலியைப் போல போர்க் காட்சிகள், அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுப் படமாக்கப்பட்டிருக்கிறது.

‘பத்மாவதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மிக வைரலான இந்த ட்ரெய்லரை யூ-ட்யூப் தளத்தில் ஒரே நாளில் 15 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பாலிவுட் வரலாற்றில் 24 மணி நேரத்தில் இதுவே அதிகபட்சம் என படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளிவந்து பல சாதனைகளைப் படைத்தது. மெர்சல் டீசரை ஒரு நாளில் 11 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். அந்தச் சாதனையை எல்லாம் ஆரவாரமில்லாமல் தூக்கிச் சாப்பிட்டு விட்டது ‘பத்மாவதி’ ட்ரெய்லர். ‘மெர்சல்’ ட்ரெய்லர் இந்தச் சாதனையை முறியடிக்குமா எனப் பார்க்கலாம்.

Comments

comments

SHARE