நான் தான் மங்காத்தாவில் நடிச்சிருக்க வேண்டியது: சொல்கிறார் ஹீரோ

சென்னை: மங்காத்தா படத்தில் நான் தான் நடித்திருக்க வேண்டியது என்று கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

அபியும் நானும் படம் மூலம் கோலிவுட் வந்தவர் கணேஷ் வெங்கட்ராமன். அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

இணையதளம்

ஷங்கர்-சுரேஷ் இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஸ்வேதா மேனன், சுகன்யா உள்ளிட்டோர் நடித்துள்ள சைபர் கிரைம் குறித்த படமான இணையதளம் இன்று ரிலீஸாகியுள்ளது.

அஜீத்

நான் சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தேன். எனக்கு அஜீத் சார் தான் ரோல் மாடல். அவரும் சினிமா பின்னணி இல்லாமல் வந்து வெற்றி பெற்றுள்ளார். அஜீத்தை சந்தித்து அறிவுரை பெறும் அளவுக்கு அவருடன் தொடர்பு உள்ளது என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.

அன்பு

அஜீத் அனைவரிடமும் அன்பாக பழகுவார். அனைவரிடமும் சரிசமமாக பேசுவார். அவரை ஒரு முறை பார்த்தாலே உங்களுக்கு அது புரியும். அமிதாப் சார், கமல் சாருடன் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் கணேஷ்.

விஜய்

விஜய் சாரின் மிகப் பெரிய ரசிகன் நான். அவர் என்ன அருமையாக நடனம் ஆடுகிறார். கத்தி படத்தில் இருந்து அவரின் தீவிர ரசிகனாகிவிட்டேன். அஜீத் சார், விஜய் சார் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷன். அஜீத்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் என்று கணேஷ் கூறியுள்ளார்.

மங்காத்தா

மங்காத்தா படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்கவிருந்தேன். அந்த நேரத்தில் நான் அமெரிக்காவில் இருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போனது என்கிறார் கணேஷ்.

Comments

comments

SHARE