விஷாலின் நடிகர் சங்க விழாவை ,பிச்சை எடுக்க வருகிறீர்களான்னு கேட்ட மலேசிய பத்திரிகை!

சினிமாவில் நடிகர்களுக்காக கட்டிடம் கட்டுவதற்காக,தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் மலேசியாவில் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள்.

natchathira kalai vila 2018
natchathira kalai vila 2018

இதில் ரஜினி,கமல்,சூர்யா,விஷால், விஜய் சேதுபதி கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் பல சினிமா நட்ச்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

ஆனால் அஜித்,விஜய்,சிம்பு ,தனுஷ் ,குஷ்பு,சரத்குமார், சந்தானம்,ஜெய், அரவிந்த் சாமி என சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.ஆனால் விஜய் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் ஆனால் இந்த முறை தவிர்த்துள்ளார்.ஆனால் இதில் சிலபேருக்கு அழைப்பே கொடுக்கவில்லையாம்,சிலர் அழைத்தும் கரணம் சொல்லி மறுத்துள்ளார்,சில பேர் காரணம் இன்றி மறுத்துள்ளார்.

natchathira kalai vila 2018
natchathira kalai vila 2018

ஆனால் கலைநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நட்சத்திர கலை விழாவில் சில கலைஞர்கள் அவமான படுத்தப்பட்டுள்ளனர். இதை பார்த்த எஸ்.வி.சேகர் தனது டிரஸ்டீ பதவியை ராஜினாமா செய்துள்ளார் இது நடிகர் நடிகைகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

natchathira kalai vila 2018
natchathira kalai vila 2018

மேலும் பிச்சை எடுக்க இங்கு வருகிறீர்களா என்று மலேசிய பத்திரிகையில் நட்சத்திர கலைவிழா பற்றி செய்தி வெளியானதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட விஷால் தலைமையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தினார்கள். சில பிரபலங்களை சென்னை விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பினார்கள்.

sv-sekar
sv-sekar

 

இது குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.மலேசியாவில் நடந்த விஷயங்கள் மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. பிச்சை எடுப்பதற்கு இந்த ஊருக்கு வருகிறீர்களா என்று மலேசிய பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்கள். அந்த விளையாட்டு திடலில் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய அரங்கில் 15 ஆயிரம் பேர் இருந்தார்கள்.

Gnanavel Raja
Gnanavel Raja

ஞானவேல்ராஜாவை  எஸ்.வி. சேகர்  கூறியது சினிமாவில் அசிங்கமான ஒரு மனோபாவம் உள்ளது. பணத்தால் யாரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பவர் ஞானவேல்ராஜா என்றார்.

manoj
manoj

மேலும் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், இவரை  விமான நிலையத்திற்கு வரச் சொல்லிவிட்டு  டிக்கெட் இல்லை என திரும்பிப் போகலாம் என்றார்கள். அடுத்து விக்ரமனை அழைத்து உங்களுக்கு டிக்கெட் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார்கள். இதற்க்கு முன் கேப்டன் விஜயகாந்த் நடத்தியபோது திறமையாக  நடத்தினார் என்றார்.

bhayaraj

இயங்குனர்  பாக்யராஜ் இதை பற்றி கூறுகையில் கமல், ரஜினி மூத்த நடிகர்கள் என்று சென்றார்கள். அவர்களை போன்றே நானும் மூத்த நடிகன் தான். என்ன அவர்கள் என்னைவிட அதிகம் பணம், கொஞ்சம் அதிகம் பிரபலமானவர்கள். அவர்களுக்கு இரண்டு கொம்போ, எனக்கு ஒரு கொம்போ இல்லை அவ்வளவு தான்.

Comments

comments