ஓவியாவின் புது கெட்அப் ரகசியம் வெளிவந்தது அதிர்ச்சி தகவல், ரசிகர்கள் வருத்தம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழின் உச்சிக்கு சென்றுள்ளவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டுள்ளார்.அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கேரளாவில் உள்ள தனது சொந்த வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.அதோடு அவர் புதிய கெட் அப்பில் வலம் வருகிறார்.

இந்த புதிய வகை ஹேர் ஸ்டைலோடு வலம் வந்த அவருடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். ஓவியாவின் இந்த புதிய கெட் அப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் இந்த புதிய ஹேர் ஸ்டைல் பிரபல ஹாலிவுட் நடிகை நடாலி டார்மர் மற்றும் அக்ஷரா ஹாசன் போல உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் நடிகை ஓவியாவுக்கு புதிய ஹாலிவுட் படம் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காகத்தான் இந்த புதிய ஹேர் ஸ்டைல் எனவும் கூறப்படுகிறது.oviya

ஆனால் ஓவியாவுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டதால் கப்பிங் தெரபி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கப்பிங் தெரபி கொடுக்கப்பட்டவர்களுக்கு காதுக்கு மேலே ஒரு சிறிய ஆபரேசன் செய்யப்படும். அதற்காகத்தான் காதுக்கு மேலே உள்ள முடி அகற்றப்பட்டுள்ளது.நீங்கள் உற்று கவனித்தால் காது பகுதிக்கு மேலே சிவப்பு நிறத்தில் தழும்பு இருப்பதை காணலாம். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Comments

comments

SHARE