தமிழ் நாட்டிற்கே வந்து விஜய்யின் சாதனையை முறியடித்த பவன் கல்யாண்!

அஜித் நடித்த வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கடமராயுடு என்ற பெயரில் நடித்திருக்கிறார். பக்காவாக தயாராகி இருக்கும் இப்படம் வரும் மார்ச் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

அண்மையில் வெளியான டிரைலருக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தனர். தற்போது வந்த தகவல்படி சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் இப்படத்துக்காக 51 ஷோக்களை ஒதுக்கியுள்ளனர்.

ஆனால் விஜய் நடித்த ‘தெறி’ படத்திற்கு இந்த திரையரங்கில் 43 ஷோக்கள் மட்டுமே ஒதுக்கபட்டது.இதன் மூலம் ஒரு தெலுங்கு நடிகரின் படம் விஜய் படத்தை விட அதிக ஷோக்கள் பெறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் விஜய் படைத்திருந்த சாதனையை தற்போது பவன் கல்யான் முறியடித்துள்ளார்.

அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த ‘வேதாளம்’ படத்திற்கு இந்த திரையரங்கில் 59 ஷோக்கள் ஒதுக்கபட்டது குறுப்பிடத்தக்கது.

Comments

comments

SHARE