நண்பா நண்பான்னு சொல்லி போட்டி போட்டு கொண்ட கார்த்தி விஷால்! கடுப்பான பிரபுதேவா !

படத்தை துவங்கிய மூன்றாம் நாளே துர்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார் பிரபுதேவா. ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் கார்த்தியும் விஷாலும்தான் ஹீரோக்கள். இவருக்கு தெரியாமல் அவரும், அவருக்கு தெரியாமல் இவரும் பிரபுதேவாவை அப்ரோச் செய்து, “என் கேரக்டரை எப்படி டிசைன் பண்ணியிருக்கீங்க. ஒரு சீன் விடாம சொல்லுங்க” என்று தொணப்பி எடுக்க… நண்பர்களா பேசி பேசி இப்படி இருக்காங்களே என பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார் பிரபுதேவா.

prabhudevaசொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கு போன பிரபுதேவா, அதே வேகத்தில் தயாரிப்பாளர் ஐசரிகணேஷுக்கு மெசேஜ் தட்டிவிட்டாராம். என்னவென்று? படம் ‘டிராப்’ என்று! ஐசரிகணேஷு இனிமே இரண்டு ஹீரோவா வச்சி படமே எடுக்க கூடாதுடா என்று முடிவு செய்து விட்டாராம்..

கருப்பு வெள்ளைக்கு கொடுத்த கால்ஷீட் தேதிகளை சண்டக்கோழி பார்ட் 2 வுக்கு கொடுத்திருக்கிறார் விஷால். கார்த்தியும் அதே வேகத்தில் இன்னொரு படத்திற்கு சைன் பண்ணும் முடிவிலிருக்கிறார். நடுவுல நம்மமாஸ்டரும் வேற வேலை பார்க்க போயிட்டாராம்.

அந்த படத்தில் நடிகர் சங்கத்திற்காக காசு இல்லாம நடிக்கறேன்னு சொல்லி தேர்தலிலும் ஜெய்ச்சிடாங்க. இப்ப கட்டிட பூஜையும் போட்டுட்டாங்க. நம்ம அரசியல்வாதிங்களை விட இவங்க நல்லா அரசியல் பண்றாங்க.. போதாதா குறைக்கு தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் வெற்றி. அதுல குடுத்த வாக்குறுதி என்ன ஆகா போகுதோ..

Comments

comments

SHARE