வைரலாகும் பிரியா பிரகாஷ் வாரியர் – “அஜித், விஜய், சூர்யா ” மேஷ் அப் எடிட் வீடியோ !

சில நாட்களாக ட்விட்டரில் பின்னணி இசையுடன் ஒரு சிறிய வீடியோ கிளிப் வைரலானது. காதலர் தின ஸ்பெஷல், வாலெண்டைன்ஸ் வாரம் என இளசுகளிடம் ட்ரெண்டிங்.

ட்ரெண்டிங் ஆகியுள்ளவர் புது முக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ” ஒரு ஆதார் லவ் ” என்ற படத்தில் உள்ள ” மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடலின் சிறிய கிளிப் தான் அவரை உலக பேமஸ் ஆகியுள்ளது.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

இது தான் அவரின் முதல் படம். சில காலமாகவே மாடலிங் உலகில் இவர் பிரசித்தி தான். இவர் பேஸ் புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஏறலாம். இன்ஸ்டாகிராமில் 778 ஆயிரம் பாலோயர்கள் உள்ளனர். ட்விட்டரில் நேற்று தன் கணக்கை துவங்கிய முதல் நாளே 14 ஆயிரம் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டனர்.

அது மட்டும் அல்லது இவர் பெயரில் அவ்வளவு டூப்ளிகேட் அக்கௌண்டுகளும் உள்ளது. எது ஒரிஜினல், எது போலி என தெரியாமல் பலரும் உள்ளனர்.

சாதாரணமாகவே நம் தமிழக இளசுகளுக்கு கேரளா பெண்கள் என்றால் ஒரு வித ஈர்ப்பு அதிகம். இதோ போல ட்ரெண்டிங் ஆகும் ஒருவரை விட்டு விடுவார்களா ? தங்கள் பாவொரிட் ஹீரோவுடன் இணைத்து மேஷ் அப் எடிட் செய்து அசத்தியுள்ளார்.

இதில் சூர்யா அவர்களின் எடிட் விடியோவை ப்ரியாவே தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தெறி படத்தில் தளபதி

வாலி பட அஜித்