ரஜினி கீழே, கமல் மேலே! அப்படி என்னதான் நடந்தது?

முரசொழி பத்திரிக்கையானது 1942ம் ஆண்டு துவங்கப்பட்டு இந்த வருடத்தோடு தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. தி.மு.க கட்சியினால் நடத்தப்படும் இந்த பத்திரிக்கைக்கு பவளவிழா சென்னையில் இன்று கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்துகொள்ளவில்லை. அவரை தவிர ஸ்டாலின் உட்பட அனைத்து தி.மு.க உறுப்பினர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவின் போது மேடையில் கமல், நக்கீரன், வைரமுத்து, உதயநிதி, ஸ்டாலின் மேலும் பலர் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் சட்டையில் முரசொழி பாட்ச் அணிந்திருந்தனர்.

ஆனால் விழாவிற்கு அழைக்கப்பட்ட ரஜினி அவர்கள் மேடையில் அமர்த்தபடாமல் கீழே மற்றவர்களோடு அமர்த்தப்பட்டார். விழா துவங்கி ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தபோது இடை இடையே நினைவு பரிசுகளை ஸ்டாலின் அங்கு வந்திருந்த ஒவ்வொருக்கும் வழங்கினார். அதில்கூட ரஜினிக்கு தாமதமாகவே பரிசு வழங்கப்பட்டது.

ஏற்கனவே பவளவிழா அழைப்பு பத்திரிகையில் ரஜினியின் பெயர் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கமல் அ.தி.மு.க கட்சியை எதிர்ப்பதால் அவரை தி.மு.க வுடன் இணைத்துக்கொள்வதற்கு ரஜினியை விட கமலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

kamal attackசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எங்க போனாலும் இந்த chair பிரச்சனை பெரிய பிரச்சனையாய் இருக்கும் போலருக்கே.

Comments

comments

SHARE