“மீண்டும் வருவேன்; நம்புங்கள் !!” வீடியோ வடிவில் ரசிகர்களுக்கு சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி.

சிம்பு

சிம்பு சில நாட்களாகவே ரசிகர்கள், மீடியா என்று அனைவரிடமும் இருந்து ஒதுங்கியே உள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் பிளாப் ஆனதில் மனிதர் செம்ம அப்செட். இவர் சமூக வலைத்தளங்களில் இருந்து சில மாதங்களுக்கு முன் வெளியேறினார். அதற்குப் பிறகு எந்த ஒரு பொது  நிகழ்ச்சியிலுமே கலந்து கொள்ளவில்லை.

STR as Music Director in Sakka Podu Podu Raja

முழுமையாக ஹாலிவுட் படம், மணிரத்னம் படம் என தனது அடுத்த படத்தின் பணிகளில் பிஸி ஆகிவிட்டார் என்று இவரை பற்றி கோடம்பாக்கத்தில் பேச ஆரம்பித்தனர். சிம்பு என்ன தான் வெளி உலகில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், ‘சக்க போடு போடு ராஜா’ பட பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

Demonetization Anthem

கபிலன் வைரமுத்து எழுதி, பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்து சிம்பு பாடிய, ‘தட்றோம், தூக்றோம்’ என்ற பணமதிப்பிழப்பு தொடர்பான பாடல் சில தினங்கள் முன்பு வெளியானது. அந்த பாடலில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்யும் பல வரிகள் உள்ளன. அந்த வீடியோ காட்சியில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நடிகர் ரஜினி வரவேற்ற டிவிட்டர் ஸ்க்ரீன் ஷாட் போடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக இவர் பாடியுள்ள பாடலுக்கு தற்போது அரசியல் கட்சிகளின் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவருடைய வீட்டில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Demonetization Anthem : NO CASH NO CASH
ரசிகர்களுக்காக வீடியோவில் பேசிய சிம்பு

இந்நிலையில் நேற்று இவரின் நண்பரான மஹத் அவர்கள், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த விடியோவை அப்லோட் செய்தார். ‘ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிம்பு பேசியுள்ளார்.’

அதில் அவர் பேசியிருப்பதாவது:

#STR

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

அனைவருக்கும் வணக்கம். ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததிற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாட்களாச்சு, அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். சமூகவலைத்தளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும் போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.இது படத்தின் கெட்டப் எல்லாம் கிடையாது. வேறொரு விஷயம் சீக்கிரத்திலேயே வருகிறது. மீண்டும் வருவேன். நம்புங்கள்!

சினிமாபேட்டை கிசு கிசு


எப்படியும் இந்த 2018ம் வருடம் சிம்புவின் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று இவருடைய பெற்றோர், பெண் பார்க்கும் படலத்தில் மிகவும் தீவிரமாக இருப்பதாக சொல்லி வரும் நிலையில், இவர் திருமணம் பற்றிய அறிவிப்பு தான் விரைவில் வரும்மோ. அதை தான் சிம்பு மறைமுகமாக சொல்கிறாரோ என்று யோசிக்க தோன்றுகிறது.

Comments

comments