காலா அறிமுக காட்சிக்கு எந்த ஸ்டைலில் இசை அமைத்தால் உங்களுக்கு பிடிக்கும் ? ரசிகர்களிடம் கேட்ட இசையைமைப்பாளர்.

ரஜினி காந்தின் அரசியல் அறிவிப்பு செய்த பின் வெளிவரும் முதல் படம் “காலா” தான். மேலும் ‘கபாலி’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

kaala

சூப்பர் ஸ்டார் ரஜினி 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை அதனால் முதலில் காலா படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள். வருகிற ஏப்ரல் மாதத்தில் 27 ம் தேதியில் பிரமாண்டமாக உலகெங்கும் ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

KAALA

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன் ட்விட்டரில் ரசிகர்களிடம் வோட்டிங் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

santhosh-narayanan-music
SA NA

“என்னுடைய மிக பெரிய கனவு, ரசிகர்கள் ஆகிய உங்களை காலா இசை உருவாக்கத்தில் இணைப்பது தான். காலா’ ரஜினிக்கான அறிமுக இசை 1980 காலகட்டத்து ட்யூன் மாதிரி இருக்க வேண்டுமா? இல்லை 1990 – 2000 காலகட்டத்து பாடல் மாதிரி இருக்க வேண்டுமா? அதுவும் இல்லை என்றால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி நவீன ட்யூன்களில் வேண்டுமா? இல்லை என்றால் எல்லாம் கலந்த கலவையாக வேண்டுமா? உங்களின் கருத்துக்களை இணைப்பதில் பெருமை படுகிறேன். நன்றி .” என்று ரசிகர்களிடமே கேள்விகளை முன் வைத்துள்ளார்.