சிவகார்த்திகேயனின் வேலைக்காரனை வளைத்துப்போட்ட பிரபல நிறுவனம்

‘ரெமோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படங்கள் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’ மற்றும் பொன்ராம் படம். இது தவிர கைவசம் ‘இன்று நேற்று நாளை’ ரவிகுமார் படம் மற்றும் விக்னேஷ் சிவன் படம் உள்ளது.

இதில் ‘வேலைக்காரன்’ படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன், கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் தம்பிராமையா போன்ற பெரும் நட்சத்திர நடிகர்கள் வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும்  ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, சதீஷ், விஜய் வசந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறதாம்.

சிவகார்த்திகேயனின் படத்திற்கு எப்போதும் இசை அமைக்கும் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்..

’24 AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இதற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் வாங்கியுள்ளது.

படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ஏற்கெனவே, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

வேலைக்காரன் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார். இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது, படத்தின் சென்னை சிட்டி வெளியீட்டு உரிமையை ‘SPI சினிமாஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ’24 AM’ நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. படத்தை டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments

SHARE