ஆண்டாள் பற்றிய கருத்துக்கு வைரமுத்துவின் விளக்கம்!

இரு நாட்களுக்கு முன்னார் ஆண்டாளை பற்றி சர்சை கருத்து கூறியதால் பலர் கண்டனங்களை தெரிவித்தனர். அதற்கு விளக்கும் கொடுக்கும் வகையில் தனது நிலையை பதிவு செய்து உள்ளார்.

Vairamuthu

“புண்படுத்துவது என் நோக்கமன்று”

தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று.

ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

vairamuthu

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

Comments

comments