விஜய் ரசிகர்களே தயாரா…? இதமட்டும் பண்ணுங்க மெர்சல் மாபெரும் சாதனை படைக்கும்..!!!

விஜய் நடிப்பில் மெர்சல் படத்தை எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க தீபாவளி சரவெடியாக இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் மெர்சல் டீசர் ஏற்கனவே உலக சாதனை எல்லாம் செய்துவிட்டது,

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய புரோமோ டீசர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ‘மெர்சல்’ அனைவரையும் மிரள வைப்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் ’மெர்சல்’ அதிக திரையரங்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த ‘பாகுபலி’ யே கேரளாவில் 302 திரையரங்கங்களில் வெளியிடப்பட்ட நிலையில்,

’விவேகம்’ 320 திரையரங்கங்களில் வெளியாகி சாதனை படைத்தது, இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் ‘மெர்சல்’ 350 திரையரங்கங்களில் வெளியிடப்பட உள்ளது.

டீசர் பெற்ற லைக்குகள், யுடியுபில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளரை கவர்ந்த டீசர், ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய திரையரங்கில் பிரீமியர், என்று ‘மெர்சல்’ படம் மூலம் பல பெருமைகளை பெற்று வரும் விஜய்,

படத்தின் வசூலில் ஏற்படும் போட்டியை விட யு டியூப் பார்வையில், லைக்ஸில் ஏற்படும் போட்டி தான் அஜித், விஜய் ரசிகர்களிடையே அதிகம் இருக்கிறது.

வசூல் விவரம் என்பது ஆளாளுக்கு அடித்துவிடும் ஒரு கணக்காகத்தான் இருக்கிறது. ஆனால், யு டியூப்பில் அப்படி இல்லை, எதுவுமே கண் முன் ஆதாரத்துடன் இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ‘விவேகம்’ டீசர் 17000 லைக்குகளைப் பெற்றால் உலகத்திலேயே அதிக லைக்குகளைப் பெற்ற முதல் திரைப்பட டீசர் என்ற பெருமையைப் பெறும் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதைத் தொடர்ந்து உடனடியாக அத்தனை லைக்குகளைக் கொடுத்து ‘விவேகம்’ டீசரை உலக சாதனை புரிய வைத்தனர் அஜித் ரசிகர்கள்.mersal audio teaser 1

இப்போது விஜய் ரசிகர்களுக்கான முறை வந்துள்ளது. ‘மெர்சல்’ டீசருக்கு இதுவரை 9 லட்சத்து 68 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன.

இன்னும் 33 ஆயிரம் லைக்குகள் கிடைத்தால் உலகத்திலேயே 10 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் திரைப்பட டீசர் என்ற பெருமை ‘மெர்சல்’ டீசருக்குக் கிடைக்கும்.

ஏற்கெனவே, உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற பெருமையை மிகக் குறைந்த காலத்தில் பெற்ற பெருமையைக் கொண்ட ‘மெர்சல்’ டீசர் இந்த 10 லட்சம் லைக்குகளையும் கடந்தால் அதுவும் மற்றொரு உலக சாதனைதான்.

Comments

comments

SHARE