விஜய் சேதுபதி படத்தை தடை செய்ய சதித்திட்டம்.! பதறும் படக்குழு.!

தமிழ் சினிமாவில் தற்பொழுது வரும் சில படங்கள் சர்ச்சை காட்ச்சிகள் வசனங்கள் இடம் பெறுகின்றன அதனால் அரசியல் கட்சிகள் மத அமைப்புகள் எதிர்ப்பது வழக்கமாக ஆகிவிட்டது.

mersal

அட்லீ இயக்கி விஜய் நடித்த மெர்சல் படத்திலும் ஜி.எஸ்.டி வசனத்துக்கு பா.ஜனதா கட்சியினரும் மருத்துவ துறை குளறுபடிகள் சம்பந்தமான வசனத்துக்கு டாக்டர்களும் கண்டனம் தெரிவித்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

padmavati

இதே போல் ஹிந்தியில் தயாரான பத்மாவதி படத்திலும் வரலாற்றை திரித்து காட்டப்பட்டுள்ளது என்று எதிர்ப்பு கிளம்பியது அதனால் வடமாநிலங்களில் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது .

vijaysethupathy

மேலும் தற்பொழுது விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்  படத்தில் இடம்பெற்றுள்ள ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?’ என்ற வசனத்துக்கும் பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது..

சமீபத்தில் வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியான இந்த ட்ரெய்லரில் ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா? சர்ச்சை வசனம் வருகிறது.

vijay sethupathy

ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. ராவணன், சீதையை தூக்கிட்டு வந்து  கை விரல் கூட படாமல் பத்திரமா வெச்சிருந்தான்..அவனை நாம அரக்கன் என்றும் கேட்டவன் என்றும் சொல்றோம்.ஆனால்  ராமன் சீதையை காப்பாத்தி கொண்டுபோய் அவளை சந்தேகத்தீயில போட்டு எரிச்சானா.. அவன நாம கடவுள்னு சொல்றோமா.ராமனும் நான்தான், ராவணனும் நான்தான் என்று விஜய் சேதுபதி பேசுவதுபோல் வசனம் ஓன்று உள்ளது இந்த படத்தில்.

ராமனை அசிங்க படுத்துவது போல் உள்ளது இந்த வசனங்கள் அதனால்  பா.ஜனதா கட்சியினர் மத்தியில் விமர்சனங்கள் கிளம்பி வெடித்துள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள் இதனால் சமூகவளைதளங்கள் போர்களமாக உள்ளது.

vijay sethupathy

படம் திரைக்கு வரும்போது பல போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். இதனால் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி பல தோற்றங்களில் நடித்துள்ளார் இந்த  படங்களும் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Comments

comments