ஸ்கெட்ச் vs தானா சேர்ந்த கூட்டம் ரசிகர்களின் சிறப்பு காட்சி இந்த தியேட்டரில் தான்.

சூர்யா நடித்து பொங்கலுக்காக வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக் ,ரம்யா கிருஷ்ணன் மேலும் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

thaana serntha koottam
thaana serntha koottam

இந்த படத்தின் டீசர் நவம்பர் 30-ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் தானா சேர்ந்த கூட்டத்தின் வெளியான செகன்ட் லுக் விவேகம் , மெர்சல் சாதனையை சமீபத்தில் முறியடித்தது.

thaana serntha

இந்த படம் வருகிற 12 ம் தேதி ரிலீஸ் ஆகிறது சூர்யா ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரபல திரையரங்கமான சென்னை காசி தியட்டரில் ரசிகர்களின் சிறப்பு காட்சி காலை 7 மணிக்கு திரையிடுகிறார்கள். இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

 

விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

vikram sketch

ஸ்கெட்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது காரணம் விக்ரம் அனைத்து படத்திலும் ஏதாவது ஒரு புதிய முயற்ச்சியை மேற்கொள்வதுதான்.

sketch movie

சமீபத்தில் தான் விகரம் அப்பா மரணம் அடைந்தார் அதனால் ஸ்கெட்ச் படம் கிடப்பில் கிடந்துவிடும் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால்  ஸ்கெட்ச் படத்தின் ப்ரோமோ விடியோவை வெளியிட்டார்கள் இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

sketch

இந்த படம் வருகிற 12 ம் தேதி ரிலீஸ் ஆகிறது விக்ரம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரபல திரையரங்கமான ஜிகேசினிமாஸ் சென்னை போரூர்  தியட்டரில் ரசிகர்களின் சிறப்பு காட்சி காலை 6 மணிக்கு திரையிடுகிறார்கள். இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

 

 

Comments

comments