இப்படி தூண்டி விடுறதே இவங்கதான்..! “விவேகம்” “மெர்சல்” போட்டா போட்டி!

‘இந்த உலகமே உன் முன்னாடி நின்று….’ என்றுதான் ஆரம்பிக்கும் விவேகம் ட்ரெய்லர். அஜீத்தின் பேஸ் வாய்சில் சொல்லப்படும் அந்த வசனம், அவரது ரசிகர்களை அடி வயிற்றிலிருந்து விசிலடிக்க வைத்ததில் ஒன்றும் வியப்பில்லை.

அதற்கு சற்றும் சளைக்காமல் அதே பேஸ் வாய்ஸ்சில்தான் பேசுகிறார் விஜய். மெர்சல் ட்ரெய்லரில், ‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று..’ என்று இவர் பேசும்போது அதே அடி வயிறு கலங்க விசிலடிக்கிறான் ரசிகன்.ajith vivegam

இப்படி இருவரும் தங்கள் பலம் அறிந்தே போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இன்னும் உசுப்பிவிடுவது போலதான் சம்பவங்களும் நடக்கிறது இப்போது. விவேகம் உலகம் முழுக்க எத்தனை ஸ்கிரினீல் ரிலீஸ் ஆனதோ, அதைவிட கூடுதலாக ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என்று கிளம்பியிருக்கிறது மெர்சல் குழு.

இந்த விஷயம் விஜய் அஜீத்திற்கு தெரியுமா, அல்லது தெரியாதா? அது பிரச்சனையில்லை இப்போது.

கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து புதுப் படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து செயல்படுத்தி வரும் நிலையில், தடையை மீறி விஜய்யின் மெர்சல் படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 18 ம் தேதி மெர்சல் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் #MersalDiwali #7DaysToGo என்ற ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.

மெர்சல் படத்திற்காக 3292 ஸ்கிரீன்களை புக் பண்ணியிருக்கிறதாம் தேனான்டாள் நிறுவனம். ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இது இன்னும் கூடலாம் என்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 500 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

கேரளாவில் 325 அரங்களுகளில் மெர்சல் வெளியாகிறது. தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் வெளியாகும் மெர்சலுக்கு இதுவரை எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்குள் தயாரிப்பாளர் சங்க ஸ்ட்ரைக் முடிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முடியாவிட்டாலும் படத்தை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறார் மெர்சல் தயாரிப்பாளர்.

விவேகம் இதைவிட அதிகமா? குறைவா? புள்ளிவிபர புலிகள் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

Comments

comments

SHARE