ரசிகர்களுக்கும், இவர்கள் செய்ததற்கும் என்ன வித்தியாசம்,விஜய் ரசிகர்கள் பதிலடி.!!!

சமூக வலைத்தளத்தில் அதிக சண்டை என்றால் அது சினிமாவை வைத்துதான் அதுவும் அஜித் விஜய் என்றால் போர்கலம்தான் அதேபோல் தான் இங்கும்.சமூக வலைத்தளமே 3 நாட்களாக போர்க்களமாக மாறியது. விஜய் ரசிகர்கள் ஒரு பெண் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளில் பேசினார்கள் என்று அவர் போலிஸ் வரை புகார் கொடுத்தார்.vijay murugadoss movie

அதே நேரத்தில் முன்னணி தொலைக்காட்சியில் இதற்கு விவாதம் கூட நடந்தது, விஜய் ரசிகர்கள் அப்படி பேசியது தவறு தான் என பலரும் அவருக்கு ஆதரவாக தான் இருந்தனர்.இந்நிலையில் ஒரு சில வட இந்திய பத்திரிகையாளர்கள் அந்த பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக விஜய்யை மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.vijay record

விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகின்றனர், முதலில் இந்த பிரச்சனைக்கும் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்கும் என்ன சம்மந்தம்.அப்படி பார்த்தால் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர், அவர்கள் எல்லோரும் தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.

அவர்கள் அனைவரின் சார்பாக விஜய் மன்னிப்பு கேட்டுக்கொண்டே தான் இருப்பாரா?, சரி, பிரச்சனை பெரிதாகிவிட்டது, போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.அப்படியிருக்க விஜய் குறித்து தவறான வார்த்தைகளை விட அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது, பிறகு ரசிகர்களுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது, என விஜய் ரசிகர்கள் பலரும் இந்தியளவில் ட்ரெண்ட் செய்து பதிலடி கொடுத்தனர்.

Comments

comments

SHARE