கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்..? குசும்புக்கார தோனி கூறிய பதில் என்ன தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தன்னிடம் தேவையில்லாத கேள்வி கேட்பவர்களுக்கு வித்தியாசமான பதில் அளித்து கேள்வி கேட்டவர்களை நோஸ் கட் செய்யும் குசும்புத்தனத்தை இன்னும் விடவில்லை.

கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது தன்னுடைய ஓய்வு குறித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை அருகில் அமர வைத்து அவரையே பதில் கூற வைத்து நோஸ் கட் செய்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத நிகழ்வு.

தற்போது இதே போன்ற குசும்பத்தனமான செயலை தோனி மீண்டும் செய்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோனியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் “பாகுபலி படத்தில் கட்டப்பா பாகுபலியை ஏன் கொலை செய்தார்..? என்ற தேவை இல்லாத கேள்வி கேட்டார்.

கேள்வி கேட்டவுடன் சற்றும் தாமதிக்காத தோனி பாகுபலி படத்தை யார் யார் பார்த்தீர்கள் என்று அங்கு இருந்தவர்களிடம் கேட்க கிட்டத்தட்ட அங்கு கூடியிருந்த அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தியுள்ளனர். அதன் பின் தன்னிடம் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரிடம் நீங்கள் “அந்த கேள்விக்கான பதிலை இவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பாகுபலி படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை என்று கூறி பத்திரிக்கையாளரின் வாயை அடைத்துள்ளார்.

Comments

comments

SHARE