போர் வரும்போது பார்த்து கொள்வோம் சிஸ்டத்தை மாத்துவோம் – ரஜினிகாந்த்

சென்னை: போட்டோ எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு அளித்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள், ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் இந்நிகழ்ச்சி திடீரென ரத்தானது.
இதையடுத்து இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக ரசிகர்களுடன் தனித்தனியாக போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி விரைவில் நடக்கும் என ரஜினிகாந்த் தெரிவித்தார். இதன்படி முதல் கட்டமாக 5 நாட்கள் 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதில் பங்கேற்று ரஜினி பேசுகையில்,’ வெறும் 23 ஆண்டுகள் மட்டும் தான் நான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். மீதி 44 ஆண்டுகள் நான் தமிழகத்தில் தான் வாழ்ந்தேன். நான் பச்சைத்தமிழன். என்னை வேறு இடத்துக்கு போகச்சொன்னால், இமயமலைக்கு தான் செல்வேன். வேறு எந்த மாநிலத்துக்கு செல்லமாட்டேன். திருமாவளவன், ஸ்டாலின், அன்புமணி, சீமான் உள்ளிட்ட நல்ல தலைவர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், ஜனநாயகம் சரியில்லை. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். எதிர்ப்பு இல்லாமல் யாரும் வளர முடியாது. அனைவருக்கும் வேலை உள்ளது. ஊருக்கு சென்று தொடர்ந்து வேலையை பாருங்கள், போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்.’ என்றார்.

Comments

comments

SHARE