பொதுமேடையில் விஜய்யின் மெர்சல் படத்தை நேரடியாக விளாசிய நடிகை தன்ஷிகா.!

இயக்குநர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கி வெளி வந்த திரைப்படம் – ‘விழித்திரு’.

Vizhithiru

கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘விழித்திரு’ திரைப்படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

பெரும் போராட்டங்களுக்குப் பிறகு ‘விழித்திரு’ படத்தை வெளியிட்டுள்ள இயக்குநர், தயாரிப்பாளர் மீரா கதிரவன், தரமான ஒரு படமாக உருவாக்கியுள்ளதால் அனைவரின் கவனத்தையும், பாராட்டுகளையும் பெற்றார்.

Vizhithiru

இந்தப் படத்திற்கு டிவிட்டரில், பத்திரிகைகளில், சமூக வலைத்தளங்கள் என அனைத்து ஊடகங்களிலும் நேர்மறை விமர்சனங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை தன்ஷிகா நடித்த விழித்திரு படம் வெளியாகவிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது அதனால் படம் ரிலீஸ் ஆகாமல் போனது.

dhanshika

அதன் பிறகு தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தது எங்கள் படத்தை கவனிக்கவில்லை.

காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்பது தான் எனக்கு அப்போது புரிந்தது. என தன்ஷிகா வெளிப்படையாகவே விஜய் படத்தை பற்ற குற்றம் சாட்டினார்.

dhanshika

நான் இப்போ தைரியமா பேசலைனா வேறு எப்போ பேச முடியும். நான் மற்ற மொழிகளில் நடிக்கிறேன். அங்கெல்லாம் படம் கான்செப்ட் நன்றாக இருந்தால் ஓடுகிறது.

ஆனால் தமிழ் சினிமாஅப்படி இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

Comments

comments